தொடுதலில் கதைதலில் புணர்தலில் இல்லையடி இன்பம்
உணர்தலில் அது உள்ளது.
என் உயிர் அதை உணர்ந்த காரணமாய் என் உடல்
உருகுதடி ஒரு நிலை இல்லாமல்
என்னவிது என்று நான் கேட்பதுர்க்குள்???
என் உயிர் அதை உணர்ந்த காரணமாய் என் உடல்
உருகுதடி ஒரு நிலை இல்லாமல்
என்னவிது என்று நான் கேட்பதுர்க்குள்???
திண்மமாய் நிலைத்து பார்த்தேன்
திரவமாய் நிறைந்து பார்த்தேன்
காற்றாய் அடைத்து பார்த்தேன்
எனக்குள் நான் அடங்கவில்லை
அந்த பரம்பொருள் சொன்னான்
இம்மூன்றும் சாதாரண நிலையடா
நான் அறியா ஒரு நிலையில்
நான் அறிந்தே அடங்கி இருக்கிறேன்
திண்மம் இல்லை
திரவம் இல்லை
காற்று இல்லை
நிலை இல்லாத ஒரு நிலை
என்னவிது என்று நான் கேட்பதுர்க்குள்???
உடல் உருகுதடி ஒரு நிலை இல்லாமல்
இறுதியில் நான் அறிந்தேன்
இது தான் காதல் எனும் அந்த நான்காம் நிலை