வியாழன், 13 ஜூன், 2013

நான்காம் நிலை


வினாக்களும் கனாக்களும் எனக்காக காத்திருக்க 
அவை அனைத்தும் மறந்து என் ஏந்திழையின் 
வருகைக்காக காத்திருக்கிறேன் தினமும் காலையில் 

முகநூலுக்கு கடவுச்சொல் கொடுத்த என் இறைவா 
என்னவளின் மன நூலினில் நூழைவதற்க்கு ஒரு
சொல் மொழிவீரோ

படிப்பறிவும் பட்டறிவும் உதவவில்லை எனக்கு
என் காதலியின் அறியாத அந்த மனமறிய.
இயற்பியல் வேதியல் உயிரியல் புவியியல்
இவை அனைத்தும் அறிந்த அறிவுக்கு
ஒரு மங்கையின் மனவியல் காண்பரிதோ.

வினாக்களும் கனாக்களும் எனக்காக காத்திருக்க
அவை அனைத்தும் மறந்து உன்
வருகைக்காக காத்திருக்கிறேன்
இது தான் அந்த நான்காம் நிலை