வெள்ளி, 10 ஏப்ரல், 2009
ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு
மறுபடியும் திரு.வைகோ அவர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய பட்டு உள்ளது. ஒரு பொது கூட்டத்தில் அவர் சொன்ன கருத்துக்காக இந்த நடவடிக்கை. அவர் சொன்னது "இலங்கையில் பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் தமிழ் நாட்டில் ரத்த ஆறு ஓடும் ". இதற்காக தான் அந்த வழக்கு பதிவு செய்ய பட்டு உள்ளது. எனக்கு ஒரு விடயம் புரிய வில்லை. தமிழ் நாட்டில் எல்லா மக்களுக்கும் இன உணர்வு சுத்தமா பொய்த்து விட்டதா இல்லை ஏன் நம் மக்கள் எல்லோரும் இப்படி சிறிது கூட சொரணை இல்லாமல் இருக்கிறார்கள். வைகோ சொன்னதில் தவறு இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடந்த 50 ஆண்டுகளாய் தமிழனுக்கு இருந்த உணர்வு அடகு வைக்க பட்டு விட்டது. சரி இன்று தமிழின தலைவர் என தன்னை இனம் காட்டி கொள்ளும் நம் மாண்புமிகு முதல் அமைச்சர் சொன்னது "விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறை பிடிக்க பட்டால் அவரை ராஜபக்சே அலெக்ஸ்சண்டேர் போரஸ் மன்னரை நடத்தியது போல் நடத்த வேண்டும்" . வைகோ சொன்னது தவறு என்றால் இவர் சொன்னதும் தவறு தானே . இவரை எந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது. ஆக மொத்தத்தில் ஆட்சியில் இருப்பவர் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மற்றவர் எல்லாம் வாயை பொதி கொண்டு சும்மா இருக்க வேண்டும். ஈழ தமிழனுக்கு முதல் அமைச்சர் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும். என்னப இதை தான் ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று சொன்னாங்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
ஒரு பொறுப்புள்ள முதல்வர் "ஈழத்திற்கு செல்லுங்கள் .நான் கண்ணை மூடிக்கொள்கிறேன்" என்று சொல்லவில்லையா?
கருணாநிதி மாதிரியான கொடிய மனம் கொண்டோரின் மரணம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும்.
கருணாநிதி மாதிரியான கொடிய மனம் கொண்டோரின் மரணம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும்.
Hello Great lover
Nenga yaarai sir solrenga. aanalum eppovumae ethiri enbathu vera. aana mudhugilae aduvum ivalo periya thalaivar solli paer eduthutu kevalam pathavi aasaikai than inathai vittu kodukkum entha manitharaiyum mannika koodathu. intha thappai neengalaum nanum seitha poravilla aana oru tamilina thalaivar seiyya koodathu sir.
ஹலோ கிரேட் லவர்
நீங்க யாரை சார் சொல்றீங்க. ஆனாலும் எப்போவுமே எதிரி என்பது வேற. ஆனா முதுகிலே அதுவும் இவளோ பெரிய தலைவர் சொல்லி பேர் எடுத்துட்டு கேவலம் பதவி ஆசைக்காய் தன் இனத்தை விட்டு கொடுக்கும் எந்த மனிதரையும் மன்னிக்க கூடாது. இந்த தப்பை நீங்களும் நானும் செய்தா பொரவில்ல ஆனா ஒரு தமிழின தலைவர் செய்ய கூடாது சார்.
கருத்துரையிடுக