உண்மை என்னவென்றால் இப்போது இருக்கும் தமிழர் பல பேருக்கு இலங்கையின் வரலாறு சரியாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஊடக செய்திகளின் தவறான சுட்டி காட்டுதல் பெரும்பாலான மக்களை இலங்கையின் வரலாறு பற்றி தவறாகவே எண்ண வைத்து விட்டது. இவர்களை பொறுத்த மட்டில் இலங்கை தமிழர் அனைவரும் புலிகள் தாம். இலங்கை என்ற கண்ணீர் தேசத்தின் வரலாறு அதில் தமிழர் எப்படி படிப்படியாய் இரண்டாம் தர மக்களாய் தள்ள பட்டார்கள் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியாது. இன்று இந்த நிலைக்கு ஈழ தமிழர் தள்ளப்பட முதல் காரணமாய் இருந்தவர்கள் மதிப்பிற்குரிய ஆங்கில ஆட்சியாளர்கள் தான். அவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சிங்கள பெரும்பான்மை மக்களின் அடி வருடி தங்கள் ஆட்சியை பாதுகாத்து கொண்டனர். அன்று ஈழ தமிழரின் அடிப்படை வேண்டுகோள்களை செவி மடுத்து அவர்கள் கேட்டு இருந்தால் இன்று எம் மக்கள் இப்படி ரத்தம் சிந்தி இருந்து இருக்க வேண்டி இருக்காது.
இலங்கை என்னும் கண்ணீர் தேசத்தின் வரலாறு ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய ஒன்று. இது என்னால் ஆன சிறிய முயற்சி ஏன் எனில் பெரும்பான்மையான பதிவர்களும் அதை படிப்பவர்களும் இலங்கை பற்றி சரியான வரலாறு தெரியாதவரை அதனை பற்றி எழுதுவதும் அவருக்குள்ளே சண்டை இட்டு கொள்வதும் வருத்ததிற்குரிய ஒன்று. உண்மையில் நம் அனைவரும் இந்தியர் என்பதும் தமிழர் என்பதும் உணர வேண்டிய ஒன்று. இதில் இன வெறி என்பதும் பாசிசம் என்பதும் தவறான கருத்துக்கள்.
இலங்கை - இந்த கண்ணீர் தேசத்தின் உண்மைகளை அறிய வேண்டுமானால் பல நூறு ஆண்டுகளின் முற்பால் நம்ம செல்ல வேண்டியது அவசியமாகிறது. இலங்கை இந்திய நாட்டின் ஒரு பகுதியாய் இருந்ததும் சிங்களர், தமிழர் இருவுரும் நம் மாற்றுருக்கள் என்பதும் உண்மையின் உண்மை. இந்துமா கடலின் நீர் அளவு அதிகமாக இலங்கை என்னும் இந்த தீவு இந்தியாவை விட்டு பிரிந்து சென்றதும் பூலோக படம் படி சரியான கூற்றைத்தான் இருக்க இயலும். நான் சொல்ல போவது என்க்கு தெரிந்த மட்டில் இந்த இலங்கை நம்மிடம் இருந்து பிரித்த பிறகு நடந்தவை.
ராமாயண காலம் தொட்டு இலங்கைக்கும் நமக்கும் தொடர்பு இருந்து வந்ததே உண்மை. பின்பு தமிழ் மன்னர்கள் வரலாறுகளும் இதேயே உரைகின்றன. இலங்கையின் பெருபான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றி வந்தனர் என்பது வரலாறு அவர்களை தன் நாம் சிங்களர் என கூறி வருகிறோம். இருந்தும் தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பரவி இருந்தனர் என்பதே வரலாறு. வடக்கு மற்றும் கிழ்க்கு பகுதிகளில் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமா இருந்தது.
தொடரும்
2 கருத்துகள்:
Mugundh,good work abt Eelam. Longing to read full...comments after full edition
good work... comments after completion... i'm impressed at ur thamizh unarvu... continue
கருத்துரையிடுக