புதன், 25 பிப்ரவரி, 2009
மெல்ல தமிழினி சாகுமோ
மெல்ல தமிழினி சாகுமோ
தமிழனே இன்னும் என்ன செய்ய போகிறாய். இறுதி மூச்சு வரை போராடி ஆயிற்று, மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுமே நடகாதது போல சிங்கள அரக்கன் ராஜபாக்சேவின் அடி வருடி நடகின்றன. என்னோமோ நடக்கிறது இந்த காங்கிரஸ் அரசு எதற்காக் இப்படி இலங்கை அரசுக்கு ஆயுத உதவியும் பண உதவியும் அளித்து வருகிறது என்பது கடவளுகே விளங்காத ஒன்று.
எனக்குள் எழும் எண்ணங்கள் என்னையே அருவேருப்பாக்கி பார்கின்றன ஒட்டு மொத்தத்தில் எல்லா தமிழனும் இப்படி தான் நினைகிறான். ஒவ்வொரு தமிழனும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என குமருகிறான். எம் மக்கள் மாக்களை போல அழிக்க பட்டு கொண்டு இருக்கும் வேளையில் நான் மட்டும் இங்கே சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.
சமிபத்தில் கூட இலங்கைக்கு 36 கோடி உதவி அளித்திருக்கிறது நடுவண் அரசு. எதற்காம் போரில் இருந்து இலங்கை மீண்டு ஐ டி துறையில் செழித்து விளங்கவாம் .ஆம் எம் இன மக்களின் சடங்லங்கள் மீது இருந்து கொண்டு அதை அவர்கள் செய்ய வேண்டும் அது தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூலி கார அரசின் நோக்கம். நாமெல்லாம் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க வேண்டும். ரத்தம் கொதிக்கிறது, இந்த நிமிடத்தில் சிங்கள அரகர்களின் பிரதிநிதி ராஜபக்சே இன்போசிஸ் நாராயணமூர்த்தியை சிறி லங்காவின் முதன்மை ஐ டி ஆலோசகராய் நியமித்து இருக்கிறார். எங்கே போய் என் தலையை இடித்து கொள்வது. இப்படி ஒரு பதவியை நாராயணமூர்த்தி வகிப்பதற்கு பதில் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில் இரண்டரை லக்சம் தமிழ் மக்களையும் கொன்று விட்டு முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ள எல்லோரையும் மன உலச்சளால் தீ குளிக்க வைத்து விட்டு தான் ராஜபக்சேவும் அவர் அடி வருடும் இந்திய கனவான்களும் உறுங்கவர் என்ற உண்மை வெகு தூரத்தில் இல்லை.
எம் மக்களே ஒவ்வொரு தமிழனும் என்னை போல தன் ஒவ்வொரு நாள் விடியும் போதும் ஏங்கி கொண்டு இருக்கிறான். எம் மக்களை காப்பாற்றுவார் யாரோ.
எம் தமிழினம் வாழுமோ இல்லை இப்படி மெல்ல சாகுமோ..........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
மிகச்சரியான கருத்துக்கள். இந்த உண்மைகள் தமிழனுக்கு எப்போது உறைக்குமோ???!!
நன்றி தமிழர் நேசன். தமிழனக்கு உரைத்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நானோ நீங்களோ இதை செயல்படுத்துவது கடினம். ஆனால் நம்மை வழி காட்டி செல்ல எந்த தலைவரும் தயாராக இல்லை. எல்லோரும் அரசியல் சுய லாபம் காணவே இதை உபயோக படுத்தி கொள்கின்றனர்.
கருத்துரையிடுக