செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

தமிழ் இழம் காப்போம்


இலங்கை பற்றி எனக்கும் சில வார்த்தைகள் எழுத வேண்டிஇருக்கிறது. என் மக்கள் அங்கே படும் பாடு சொல்லி தெரிய போவதில்லை. நம் இந்திய தேசம் நினைத்து இருந்தால் இந்த இன படுகொலையை எப்பொழுதோ தடுத்து இருக்கலாம். ஆனால் இப்போது இங்கு ஆளும் காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்த்யின் படுகொலைக்காக என் மக்களை பழி வங்கி கொண்டு இருக்கிறது. ஒரு தனி மனிதரின் மரணத்துக்காக அப்பாவி மக்கள் இலங்கையில் கொல்லபடுவதும் நம் இந்திய அரசு அதை மறைமுகமாய் ஆதரிப்பதும் வேதனையான ஒன்று.

தமிழ் இன தலைவர் என மார் தட்டி கொள்ளும் திரு.கருணாநிதி தன் பதவி ஆசைக்காக காங்கிரஸ் அரசை எதுவும் கேட்பதில்லை. நம் முன் கபட நாடகம் ஆடி கொண்டு தன் இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் காங்கிரஸ் அரசை அடி பணிய வைத்து இருக்கலாம். கேவலம் தன் குடும்ப நலனுக்காக இலங்கை தமிழரின் வாழ்கையை காங்கிரஸ் அரசிடம் அடகு வைத்து விட்டார் இந்த தமிழ் இன தலைவர். இது இன்னும் சிலர் இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிறரர்கள்.

ஆக மொத்தம் தமிழ் இனம் அழிந்து கொண்டு இருக்க இந்த தன்னிகர் இல்லா தலைவர்கள் இதை அவரவர் சூழ்நிலைகேற்ப உபயோக படுத்தி கொள்கின்றனர். இது போன்ற தலைவர்களை வைத்து கொண்டு நாமும் தமிழ் இனம் அழிவதை பார்த்து கொண்டு கை பிசைந்து கொண்டு தான் இருக்க போகிறோம்.

சில புத்திசாலிகள் இதை கஷ்மீர் பிரச்சினையோடு ஒப்பிடுகின்றனர். கஷ்மீர் பிரச்சின்னையின் அடிபடையே வேறு. இது அவர்களக்கு எப்படி சொன்னாலும் புரிய போவதில்லை. உண்மையை சொன்னால் காஷ்மீரில் அதன் குடி மக்கள் யாரும் வசிக்கவில்லை. அவர் அனைவரும் புலம் பெயாந்து வேறு மாநிலம் சென்று விட்டனர். மிச்சமுள்ள முஸ்லீம் மக்கள் திவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை எதிர்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் கூட இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு ராஜீவ் கொலைக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அழிப்பது எப்படி சரியாகும். தவிர விடுதலை புலிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது. அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்து விட்டு பிரபாகரனை ஒரு ராணுவ தளபதியை விட்டு பிரபாகரனின் முதுகுபுறம் சுட சொன்ன ராஜிவை அவர்கள் கொன்றது தவறில்லை தான் அவர்களை பொறுத்த வரை. ஆனால் நமக்கு அது நியாயம் இல்லை தான். அதற்காக இலங்கை தமிழ் மீது முழுவதும் தாக்குதல் நடப்பதை நம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் ஒன்று திரண்டு இதை எதிர்க்கத்தான் வேண்டும்.

தமிழ் மக்களே குரல் கொடுங்கள். நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிதந்தை செய்வோம். தயைவு செய்து தீகுளிபதும் உயிர் நீப்பதும் இதற்க்கு முடிவல்ல. நம் கோரிகையை எல்லா இடங்களுக்கும் பரப்புவோம். இலங்கையில் போர் நிறுத்தம் வர பாடுபடுவோம் நம் மூச்சுள்ளவரை.

வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.

கருத்துகள் இல்லை: