வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

பால் பாயசம்


அந்த காலை நேரத்தில் பயணிகள் நிழற்குடையின் அருகில் நின்று கொண்டுஇருந்தான் இளங்கோ. மனதுக்குள் தன் காதலியை நொந்து கொண்டு இருந்தான். தினமும் இவளுக்கு இதே வேலை தான் சீக்கிரம் வாடி கொஞ்ச நேரமாவது ஒன்ன பேசிட்டு இருக்கலாம் சொன்னா எங்க கேட்கிறா. "அதோ வந்துட்டா " அவன் பார்த்த திசையில் மஞ்சள் நிற புடவை கட்டி கொண்டு அஞ்சலி மிகவும் அழகு தான். இளங்கோ ஒரு வேலையில்லா பட்ட தாரி கட்ட பொறியியல் படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தான். என்ன செய்வது வேலை கிடைத்த பாடில்லை.

அஞ்சலி அந்த அழகு தேவதை இவன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் குடி இருக்கிறாள். இளங்கோ வேலை இல்லாதவன் என்றாலும் ஒரு சமுக ஆர்வலன். அவனின் புரட்சி கருத்துகள் அஞ்சலியை அவன் மேல் காதல் கொள்ள வைத்தன. இவர்கள் காதல் வழக்கம் போல இருவர் வீட்டுக்கும் தெரியாது. அஞ்சலி இளங்கோவை நெருங்கி விட்டாள்.

"ஏன் அஞ்சலி இவளோ நேரம். தினமும் உனக்கு இதே வேலையை போச்சு."

"கோவா படதேங்க இளங்கோ வழக்கம் போல அம்மா லேட் பண்ணிட்டாங்க".

"சரி வா ஆட்டோலயே போய்டலாம் அட்லீஸ்ட் உன் கூட கொஞ்ச நேரமாவது ஸ்பெந்ட் பண்ணலாம்."

இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள். "ஆட்டோ எல் ஐ சி போப்பா" இளங்கோ சொல்ல ஆட்டோ புறப்பட்டது.

"இளங்கோ எப்போ தான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது" " அஞ்சலி உனக்கே தெரியும் ஒரு நல்ல வேலை இல்லாமல் நம்ம சென்னைலே வாழ முடியாது."

"இளங்கோ எங்க வீட்டிலே மாப்பிள்ளை பார்க்க தொடங்கிட்டாங்க நம்ம இப்படியே இருக்க முடியாது. சீக்கிரமா நீங்க ஒரு வேலை பாருங்க இல்லேன்னா நம்ம காதலை மருந்தட வேண்டியது தான்."

இளங்கோவுக்கு கோபம் வந்தது. "இத பார் அஞ்சலி எல்லோரை மாதிரி நீயும் இப்படி பேசுவேநு நான் எதிர் பார்க்கலே. நானும் வேலை தேடிட்டு தான் இருக்கேன் ஆனா என்ன பண்றது."

"அப்படினா பேசாம என்னை மறுந்துடுங்க. என்னால எங்க அப்பாவே மீறி ஒன்னும் செய்ய முடியாது இளங்கோ."

பின்னர் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
எல் ஐ சி வந்தவுடன் அஞ்சலி இறங்கி விட்டாள். "இளங்கோ நல்ல யோசிச்சு முடிவு எடுங்க".

இளங்கோ ஏற்கனவே மிகுந்த வேதனை பட்டு கொண்டு இருந்தான். அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அப்பா இல்லாததால் அம்மா மிகவும் சிரமப்பட்டுதான் படிக்க வைத்தாள். ஆனால் இளங்கோவுக்கு படிப்பு நன்றாக வந்துது என்பதால் எப்படியோ ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்து படித்து முடித்து விட்டான். வேலை தான் இன்னும் கிடைக்கவில்லை.

இளங்கோ வீட்டை அடைந்த போது அம்மா வீட்டில் இருந்தாள். "ஏன்மா இன்னிக்கி வேலைக்கு போலையா" " இல்லடா கண்ணு இந்த மூச்சு விட ரொம்ப சிரமமா இருக்குட அது தான் திரும்பி வந்துட்டேன். அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. இளங்கோவுக்கு அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய இரண்டு லச்சம் பணம் தேவை பட்டது. "இந்த பாழா போன வேலை கிடக்கஅலையே என்று தோணியது.

இளங்கோ ஒரு துணை பொறியாளர் வேலைக்கு விண்ணப்பம் போட்டு இருந்தான். அம்மா சொன்னாள் "கோவேர்மேன்ட் வேலை இது கிடைச்சா என் கவலை எல்லாம் போயிடும். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் அது நிறுத்தி வைக்க பட்டு இருந்தது.

இளங்கோ வீட்டை விட்டு வெளியில் வந்த நேரம் அந்த பகுதியின் வட்ட செயலர் நின்று கொண்டு இருந்தார். "வாங்க தம்பி. எங்க கட்ச்யில் வந்து சேர சொன்னா சேர மட்ரே. இதோ பார் புரட்சி கருத்து எல்லாம் வாழ்கைக்கு ஒத்து வராது. ஒரு வேலை இருக்கு செய்றியா ரெண்டு லச்சம் தருவாங்க உன் குடும்பத்துக்கு."

இளங்கோ யோசித்தான் இப்போ அந்த பணம் கிடைத்தால் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்யலாம். சரி என்றான். "என்ன வேலை". அவர் கூறியதாய் கேட்டு அதிர்ந்தவன் அம்மாவின் ஆபரேஷன் நினைவுக்கு வர ஒத்து கொண்டான்.

அந்த கட்ச்யின் தலைவரை கைது செய்து விட்டார்கள். அதை எதிர்த்து ஆளுநர் மாளிகைக்கு உர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த கூட்டத்தில் முதல் ஆளாக இளங்கோ.

அம்மா இளங்கோவை தேடி கொண்டு இருந்தாள். பக்கத்து வீட்டு கோபாலிடம் கேட்டாள். " ஏன்பா கோபாலு என் புள்ளைய பாத்தியா. இல்லைமா." "
"எங்க போய்ட்டான். போஸ்ட் மேன் தூரத்தில் வருவது தெரிந்தது. வாப்பா என்ன அம்மா கேட்க
போஸ்ட் மேன் சொன்னான். உன் புள்ளைக்கு வேலை வந்திருக்கு. அந்த துணை பொறியாளர் வேலை வந்து இருந்தது. " அம்மா இளங்கோவுக்கு பிடித்த பால் பாயசம் வைக்க அடுப்பை பற்ற வைத்தாள்.

அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் ஆனா இளங்கோவை காணவில்லை. அங்கே ஆளுனர் மாளிகை முன் பெரிய கூட்டம் கூடி இருந்தது. " தலைவரை விடுதலை செய் !!!!!!!
தலைவரை விடுதலை செய் !!!!!!! தலைவரை விடுதலை செய் !!!!!!!" . திடீர் என இளங்கோ கூடத்தின் முன்னே வந்தான். கையில் ஒரு பெட்ரோல் கேனுடன். நிமிட நேரத்திற்குள் பெட்ரோல் முழுவதும் தன் மீது ஊற்றி கொண்டவன் தீபெட்டியை எடுத்து பற்றவைத்தான். பெட்ரோல் இளங்கோவின் உற்ற நண்பன் போல திபு திபு என எரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. இளங்கோ கரி கட்டையாய். வீட்டில் அம்மா வைத்த பால் பாயசம் கொதித்து கொண்டு இருந்தது.




பி.கு : இந்த செய்தியை அறிந்த மாலதி குற்ற உணர்வால் பைத்தியம் ஆகி விட்டாள் .

சாரிங்க ரொம்ப சோகமான கதை தான். ஆனா ஏழைகளுக்கு எல்லாம் காதல் ஒரு சாப கேடு தான். அதனால தான் காதலர் தினத்தில இப்படி ஒரு கதை.

1 கருத்து:

Bhavani சொன்னது…

Nice one man. I liked it. One minor doubt.lover peru "Anjali"aa illa "Malathi"aa...chumma keten