நான்காம் நிலை - குழப்பம்
துணிந்து இருக்கிறேன் உன்னை
காண்பதில்லை என்று
புறக்கண்ணால் உன்னை நோக்காமல் இருக்கலாம்
என் அகக்கண்ணால் எப்படியடி நோக்காமல் இருக்க இயலும்.
புதைந்த எவற்றையும் தோண்டி எடுக்கலாம்
என் உயிருக்குள் புதைந்த என் ஏந்திழையின்
கயல்விழியாளின் மயில்னடையாளின் மானிடையாளின்
நினைவுகளை எந்த அகழ் ஆய்வால் எடுக்க இயலும்.
உயிர் முழுதும் புதைந்தவளை தோண்டி எடுக்க
இந்த புவியுலகில் ஒரு கருவியும் உளதோ.
உயிர் முழுதும் புதைந்தவளை என் உயிர்
பிரிந்திட நினைத்தால் அது இம்மண்ணுலகை
பிரியும் தருணத்திலும் நடக்காது
இது அறியாத ஒரு மூட நிலை
காதல் எனும் அந்த நான்காம் நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக