செவ்வாய், 1 ஜனவரி, 2013


நான்காம் நிலை - பதிவு

உன்னை பார்த்த அந்த நாள் என் விழிகளும் என் இதயமும் 
சண்டையிட்டு கொண்டன யாருக்கு நீ சொந்தமென.

உயிருக்கு உடைமையானவளை உடலுக்கு கூறிட்டு 
கொடுத்தலாகுமா 

உன் பார்வையும் உன் மௌனமும் ஒன்றுகொன்று 
முண்டியடித்தன என் இதயத்தை கிழிபதற்காய்.

உன் ஒரு பார்வையில் என் உடல் அணு பிளந்தாய். 
என் உதிரத்தில் கலந்து உயிரணுதன்னில் நுழைந்தாய்.

இது வரை நான் வென்ற அடையாளமெல்லாம் 
களைந்து நீ கொடுத்தது நான் உன் காதலன் எனும் ஓர் 
அடையாளம்தாம் .

உன்னருகே நான் வந்த பொழுதெல்லாம் உன் உடலறிய அல்ல 
முன்னொரு பொழுதில் நீ மறந்த நம் உயிரறிய.

உயிர் அருகும் அக்காலம் வரை இனி 
உனை தொடரும் விதிதான் பரமன் எனக்கு 
விதித்த அந்த நான்காம் நிலை.













கருத்துகள் இல்லை: