ஞாயிறு, 16 டிசம்பர், 2007

வாழ்க்கையும் காதலும்


வாழ்க்கையும் காதலும் ஒன்றோடொன்று பின்னி பிணைக்கபட்டவை. அநேகமாய் இந்த உலகத்தில் காதலிக்க இல்லை என யாரும் கூற இயலாது. அதே போல காதல் பல பேரை கவிதை எழுத வைத்து இருக்கிறது. ஆனால் என் கவிதைகள் வேறு வடிவத்தில் உதித்தவை.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2007

நான்காவது சந்திப்பு


இது நமக்குள் நான்காவது சந்திப்பு
உன் விழிகள் பூக்களை கண்ட பட்டாம்பூச்சியை
போல துடித்து கொண்டன என்னை காண்பதற்காக

காதல் பாலைவன நீர் போல காண்பவருக்கு எல்லாம் கிடைப்பதில்லை
மிக சிலருக்கு தான் தென்படும்
அருந்தியவர் எல்லாம்
அந்த பாலைவனத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும்

புதன், 11 ஏப்ரல், 2007

காதல் சந்திப்பு -3


வண்டும் மலரும் சந்தித்து தான் ஆக வேண்டும்
காதலிக்க மட்டுமல்ல
இந்த முறையும் நம் நன்கு கண்களும் சந்தித்து கொண்டன
ஒன்றை ஒன்று கைது செய்ய
அப்படி என்னடி இருக்கிறது உன் விழிகளில்
என்னால் ஒரு மணித்துளி கூட சந்திக்க முடியவில்லை அதை

உன் விழி சிறையில் இருந்து தப்பி விட்டேன் என நினைதேன்
நீ சொன்னாய் முட்டாள் நீ எப்படி சென்றாலும்
என் விழி சிறையில் இருந்து தப்பிக்க இயலாது

மீன் தொட்டியில் உலவும் மீன்களை போல என் எண்ணங்கள் உன்னையே சுற்றி சுற்றி வருகின்றன

உன் வார்த்தைகளுக்கு இசை அமைத்து கொண்டு இருக்கிறது காற்று மௌனமாய் ம்ம் மௌனம் கூட ஒரு இசை தான் நமக்குள்

நிலவு வெள்ளை நிறத்தில் தான் பார்த்து இருக்கிறேன் இன்று மஞ்சள் உடையில் இனி அம்மா குழந்தைக்கு உணவுட்டும் போது சொல்லுவாள் நிலவு மஞ்சள் நிறமென்று

நீயும் நானும் அருகில் இல்லையென்றாலும் நம் மனங்கள் நெருங்கி வந்து உரசி கொண்டன காற்று விலகி சென்றது நம்மை பிரிக்க மனமில்லாமல்

சந்திக்கலாம் மீண்டும்

சனி, 7 ஏப்ரல், 2007

காதல் சந்திப்பு -2


முன்பு சொன்னது போல வானத்தை பார்த்தேன் நிலவு
அங்கே இல்லை பின்பு தான் நினைவு வந்தது
நீ என் அருகில்

உன்னை நிலவு என்று சொல்ல எனக்கு சம்மதம் இல்லை
ஏன் என்றால் நிலவு தேய்வது உண்டு நீ தேய்வது இல்லை என் மனதில்

ஒற்றை காகம் போல உன் பெயரை மட்டும் கரைந்து போகிறேன் காதல் வானில்
மேகத்தை துணையாய் அழைத்தேன்
மேகம் சொன்னது காதல் ஒரு விசித்திர நோய்
அதற்கு மருந்தை காதலி மட்டுமே தர இயலும்
ஆம் காதல் ஒரு நோய் தான்

சக்கரம் போல என் நினைவுகள் உன்னையே சுற்றி வருகின்றன
உன்னுடன் நான் பேச வந்த அனைத்தும் காற்றில் கலந்து விட்டன
நீயும் பேசியதும் அப்படி தான்
நம் வார்த்தைகளாவது பேசி கொள்ளட்டும் ஒன்றாய் இறுதி வரை

நீயும் நானும் சந்திப்பது இது தான் கடைசி முறை என்றாய்
இல்லை நானும் நானும் சந்திப்பது எப்படி கடைசி முறை ஆக முடியும்

நானும் நீயும் சந்தித்து தான் ஆக வேண்டும்
அலை கரையை சந்திப்பது போல
நீ கொடுத்த உன் நினைவுகளை உன்னிடமே சேர்ப்பிக்க
மறுபடியும் சந்திப்போம்

காதல் சந்திப்பு -1


அந்த இனிய மாலையில் உன்னை பார்த்த போது
பூத்துது பூக்கள் மட்டுமல்ல நானும் தான்

உன் போட்டோ காண்பித்த போது புன்னகைத்தாய்
ஒ இது தானா அந்த போட்டோ என்றாயே அலச்சியமாய்
யாருக்குடி தெரியும் என்னுள் நிகழ்ந்த பூகம்பம்

உன்னை பார்த்த பின்பு தான் உணர்ந்தேன்
சிரிப்பு கூட பூகம்பம்த்தை உருவாக்கும் என்று
பூமியில் அல்ல என் இதயத்தில்...

சாலையை கடக்கும் போது நீ காட்டிய தவிப்பு
ரசித்தேன் நான் நீயாய் நீயும் நீயாய்

காபி பருகிய சில நொடிகளில் சொன்னாய்
என்னிடம் எதையும் எதிர்பார்க்காதிர்கள் என்றாய்..
நான் எதிர்பார்ப்பது இப்படி என்னதேரில்அமர்ந்து
நீ இதை சொல்லி கொண்டு இருந்தால் போதும்

சிரித்து நடக்கலாமா என்றாய் ம்ம்ம் பறக்கலாம் என்றேன்
ஆம் நடப்பது கூட பறப்பது தான் உன்னுடன் நடக்கும் போது

நடந்தோம் என் இதயம் துடித்து கொண்டு இருக்கிறதா
என சரி பார்த்து கொண்டேன்
சொன்னாய் இருவரும் ஒன்றாய் நடப்போம்
அதை தானே நானும் சொல்லி கொண்டு இருக்கிறேன்
இவ்ளோ நாட்களாய்

இருவரின் விழிகளும் போரிட்டு கொண்டாலும்
இறுதியில் வென்றது நீ

நீ மலர் நான் வண்டு இல்லை இல்லை நான் மலர் நீ வண்டு
ஏன் என்றால் என்னில் தேன் குடித்ததும் நீ
மகரந்தம் விட்டு சென்றதும் நீ உன் நினைவுகளை

எதேச்சையாய் வானத்தை பார்த்தேன் நிலவை காணவில்லை
பின் தான்உணர்தேன் நீ என் அருகில் ...

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
உன் காதலன்

காதல் முன்னோட்டம்


அணு அணுவாய் சாவதன முடிவெடுத்து விட்டால்
காதல் சரியான வழி தான்