சனி, 7 ஏப்ரல், 2007
காதல் சந்திப்பு -2
முன்பு சொன்னது போல வானத்தை பார்த்தேன் நிலவு
அங்கே இல்லை பின்பு தான் நினைவு வந்தது
நீ என் அருகில்
உன்னை நிலவு என்று சொல்ல எனக்கு சம்மதம் இல்லை
ஏன் என்றால் நிலவு தேய்வது உண்டு நீ தேய்வது இல்லை என் மனதில்
ஒற்றை காகம் போல உன் பெயரை மட்டும் கரைந்து போகிறேன் காதல் வானில்
மேகத்தை துணையாய் அழைத்தேன்
மேகம் சொன்னது காதல் ஒரு விசித்திர நோய்
அதற்கு மருந்தை காதலி மட்டுமே தர இயலும்
ஆம் காதல் ஒரு நோய் தான்
சக்கரம் போல என் நினைவுகள் உன்னையே சுற்றி வருகின்றன
உன்னுடன் நான் பேச வந்த அனைத்தும் காற்றில் கலந்து விட்டன
நீயும் பேசியதும் அப்படி தான்
நம் வார்த்தைகளாவது பேசி கொள்ளட்டும் ஒன்றாய் இறுதி வரை
நீயும் நானும் சந்திப்பது இது தான் கடைசி முறை என்றாய்
இல்லை நானும் நானும் சந்திப்பது எப்படி கடைசி முறை ஆக முடியும்
நானும் நீயும் சந்தித்து தான் ஆக வேண்டும்
அலை கரையை சந்திப்பது போல
நீ கொடுத்த உன் நினைவுகளை உன்னிடமே சேர்ப்பிக்க
மறுபடியும் சந்திப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக