புதன், 11 ஏப்ரல், 2007
காதல் சந்திப்பு -3
வண்டும் மலரும் சந்தித்து தான் ஆக வேண்டும்
காதலிக்க மட்டுமல்ல
இந்த முறையும் நம் நன்கு கண்களும் சந்தித்து கொண்டன
ஒன்றை ஒன்று கைது செய்ய
அப்படி என்னடி இருக்கிறது உன் விழிகளில்
என்னால் ஒரு மணித்துளி கூட சந்திக்க முடியவில்லை அதை
உன் விழி சிறையில் இருந்து தப்பி விட்டேன் என நினைதேன்
நீ சொன்னாய் முட்டாள் நீ எப்படி சென்றாலும்
என் விழி சிறையில் இருந்து தப்பிக்க இயலாது
மீன் தொட்டியில் உலவும் மீன்களை போல என் எண்ணங்கள் உன்னையே சுற்றி சுற்றி வருகின்றன
உன் வார்த்தைகளுக்கு இசை அமைத்து கொண்டு இருக்கிறது காற்று மௌனமாய் ம்ம் மௌனம் கூட ஒரு இசை தான் நமக்குள்
நிலவு வெள்ளை நிறத்தில் தான் பார்த்து இருக்கிறேன் இன்று மஞ்சள் உடையில் இனி அம்மா குழந்தைக்கு உணவுட்டும் போது சொல்லுவாள் நிலவு மஞ்சள் நிறமென்று
நீயும் நானும் அருகில் இல்லையென்றாலும் நம் மனங்கள் நெருங்கி வந்து உரசி கொண்டன காற்று விலகி சென்றது நம்மை பிரிக்க மனமில்லாமல்
சந்திக்கலாம் மீண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக