சனி, 7 ஏப்ரல், 2007

காதல் சந்திப்பு -1


அந்த இனிய மாலையில் உன்னை பார்த்த போது
பூத்துது பூக்கள் மட்டுமல்ல நானும் தான்

உன் போட்டோ காண்பித்த போது புன்னகைத்தாய்
ஒ இது தானா அந்த போட்டோ என்றாயே அலச்சியமாய்
யாருக்குடி தெரியும் என்னுள் நிகழ்ந்த பூகம்பம்

உன்னை பார்த்த பின்பு தான் உணர்ந்தேன்
சிரிப்பு கூட பூகம்பம்த்தை உருவாக்கும் என்று
பூமியில் அல்ல என் இதயத்தில்...

சாலையை கடக்கும் போது நீ காட்டிய தவிப்பு
ரசித்தேன் நான் நீயாய் நீயும் நீயாய்

காபி பருகிய சில நொடிகளில் சொன்னாய்
என்னிடம் எதையும் எதிர்பார்க்காதிர்கள் என்றாய்..
நான் எதிர்பார்ப்பது இப்படி என்னதேரில்அமர்ந்து
நீ இதை சொல்லி கொண்டு இருந்தால் போதும்

சிரித்து நடக்கலாமா என்றாய் ம்ம்ம் பறக்கலாம் என்றேன்
ஆம் நடப்பது கூட பறப்பது தான் உன்னுடன் நடக்கும் போது

நடந்தோம் என் இதயம் துடித்து கொண்டு இருக்கிறதா
என சரி பார்த்து கொண்டேன்
சொன்னாய் இருவரும் ஒன்றாய் நடப்போம்
அதை தானே நானும் சொல்லி கொண்டு இருக்கிறேன்
இவ்ளோ நாட்களாய்

இருவரின் விழிகளும் போரிட்டு கொண்டாலும்
இறுதியில் வென்றது நீ

நீ மலர் நான் வண்டு இல்லை இல்லை நான் மலர் நீ வண்டு
ஏன் என்றால் என்னில் தேன் குடித்ததும் நீ
மகரந்தம் விட்டு சென்றதும் நீ உன் நினைவுகளை

எதேச்சையாய் வானத்தை பார்த்தேன் நிலவை காணவில்லை
பின் தான்உணர்தேன் நீ என் அருகில் ...

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
உன் காதலன்

கருத்துகள் இல்லை: