ஞாயிறு, 31 மே, 2009

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம்


அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2009, 07:59 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது.
இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.
கொழும்பு அரசாங்கத்தின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்கள் பேசமுடியாத விடயங்களாக உள்ளன. அது தொடர்பான தவறுகளை தவிர்ப்பதற்கு வன்னியில் நடைபெற்ற போரில் இறுதி வாரங்களில் என்ன நடைபெற்றது என்பதை சிறிலங்கா மக்கள் எல்லோரும் திரும்பி பார்க்க வேண்டும்.
அதாவது, இந்த போரானது அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொடுமையான கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அனைத்துலகம் கண்மூடிக்கொண்டு இருந்துள்ளது அல்லது இந்த போரில் ஒரு பக்கத்தில் மரணிப்பவர்கள் கருமையான தோலைக்கொண்ட ஏழை மக்கள் எனவும் அவர்கள் எண்ணி மௌனமாக இருந்திருக்கலாம்.
எவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு அப்பால் அவர்கள் மீது இனச்சுத்திகரிப்பு என்ற பதமும் பிரயோகிக்கப்படவில்லை.
உலகின் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ச்சியாகவும், வரலாற்று ரீதியாகவும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகி வருகின்றனர்.
எனவே தமது உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை.
இதன் தொடக்கமாக உடனடியாக விடை காணப்படவேண்டிய பத்து கேள்விகள் உள்ளன.
1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?
2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?
3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?
4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?
5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?
6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?
7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?
8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?
9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?
இவ்வாறு 'கௌண்டர் கரண்ட்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.

நன்றி புதினம்.காம்.


ராஜபக்சேவை சர்வ தேச நீதி மன்றத்தில் நிறுத்துங்கள் - இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்.

வியாழன், 28 மே, 2009

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ள வாக்கெடுப்பு


ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ள வாக்கெடுப்பு முடிவு [வெள்ளிக்கிழமை, 29 மே 2009, 07:12 மு.ப ஈழம்] [பி.கெளரி] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் முடிவு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது என்று 'த பைனான்சியல் ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'த பைனான்சியல் ரைம்ஸ்' நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததை தொடர்ந்து மேற்குலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செய்யமுடியாத நிலையை அடைந்துள்ளது. சிறிலங்காவில் முற்றுப்பெற்ற போர் பாரிய மனித உரிமை மீறல்களுடன் நிறைவுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா, ரஸ்யா, இந்தியா உட்பட 26 நாடுகள் சிறிலங்கா அரசின் பிரேரணையை ஆதரித்திருந்தன.
சிறிலங்கா அரசு தனது பிரேரணையில் உள்நாட்டு விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதை எதிர்த்ததுடன், விடுதலைப் புலிகள் மீதும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.
ஆனால், அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படாதது, மனித உரிமை சபைக்கு ஒரு பின்னடைவாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டவியல் பணிப்பாளர் ஜூலீற்றா டி றைவிரோ தெரிவித்துள்ளார்.
கனடா, மெக்சிக்கோ, சிலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியிலேயே சபையின் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள உள்ளனர்.
உதவி நிறுவனங்களின் பணிகளும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் தடுக்கப்படுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சிறிலங்காவில் நடைபெற்ற மோதல்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமானதும், காத்திரமானதுமான விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
இறுதி வாரம் நடைபெற்ற சமரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். மக்களின் நடமாட்டத்தை விடுதலைப் புலிகள் தடுத்ததுடன், எறிகணைத் தாக்குதல்களை மக்களின் மீது சிறிலங்கா அரசு நடத்தியிருந்தது.
மக்கள் காணமால் போவது, துன்புறுத்தப்படுவது, நிதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்படுவது போன்ற தகவல்கள் தற்போதும் தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
30 வருடகால போர் கடந்த வாரம் பாரிய அழிவுடன் நிறைவுபெற்றுள்ளது. இந்த போரில் 80,000 - 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி புதினம்.காம்

திங்கள், 25 மே, 2009

உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது


ஊடகங்கள் சொல்வதை கேட்க வேண்டாம். ஆனால் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் சுயநல கிருமிகள் ஆனால் நாம் முதலில் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கிற எம் மக்களை காப்பாற்றுவோம் பின்னர் இந்த நச்சு கிருமிகளை அழிக்கலாம். உங்களுக்கு இன்னும் இந்த கிருமிகள் மேல் நம்பிக்கை உள்ளதா மக்களே. இந்திய திருநாட்டில் நெடுங்கலமாய் தமிழனம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது வெகு சிலரால் தான் உணர முடிகிறது. தந்தை பெரியார் சொன்னது போல நாம் எல்லாம் அடிமைகள் தான் ஆனால் இந்தியாவின் குடிமக்கள் என்ற போர்வையில். வேற எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தாரை தவிர எவரும் இந்த அளவு நிம்மதியாக இருக்க இயலாது. "வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள்.

எல்லா இந்திய ஊடகங்களும் தமிழனை ஏமாற்றும் முயற்சியில் முழு வெற்றி அடைந்துள்ளனர் என்பது தான் உண்மை. ஆனால் நாம் நம் முதல்வரை குறை கூறுவுது ஏன் தெரியுமா. தமிழ் இன பிரதிநிதியாய் அவரை போற்றும் நம் மக்களக்கு அவரின் இந்த செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது. காங்கிரஸ் என்னும் நச்சு பாம்பு தான் நடந்த அனைத்துக்கும் காரணம் என தெரிந்தும் அவருடன் உறவாடுவதை எந்த தமிழனாலும் ஏற்று கொள்ள இயலாது . எந்த ஒரு போராட்டமும் முன்னே செல்ல ஒரு தலைவர் அவசியம் என்ன தான் சிலர் முதல்வரை ஏற்று கொள்ளா விட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு தலைவர் இப்படி செய்வது நமக்கு எப்படி மன அமைதியை தரும். நீங்களோ நானோ சென்று நடுவண் அரசிடம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதீர் எங்கள் ஈழ ரத்த உறவுகளை காப்பாற்றுங்கள் என சொல்ல முடியுமா. நம் ஒவ்வொரு தமிழனாலும் போராட இயலாது என்று தானே நம் முதல்வரை அனுப்பினோம் ஆனால தன் குடும்பத்தின் அரசியல் எதிர் காலத்திர்க்காகவும் சுயநலம் பேணவும் நம் முதல்வர் இப்படி செய்யலாமா.

ஒரு கோணத்தில் எப்படி இருந்தாலும் மக்கள் சபையில் முதல்வர் செய்த நம்பிக்கை துரோகம் தான் முன்னில் நிற்கும். தமிழரின் பால் ஒற்றுமை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உளமாற்று வித்தைகள் என சிலர் இவற்றை கூறினாலும் உண்மை கசக்க தானே செய்யும். எம் ரத்த உறவுகள் எம்மை காப்பற்றும் என எண்ணி இருந்த ஒவ்வொரு ஈழ மனமும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கும். தன்னிகரில்லா ஒரு தூய தலைவன் இந்த நெடிய சுதந்திர போராட்டத்தில் அவர் தம் வாழ்வு ஆதாரமாய் விளங்கிய ஒருவனும் உயிருடன் உள்ளனா இல்லையா என பதறும் அந்த உயிர்களுக்கு விடை சொல்ல போவது யார். நாளை நமக்கும் இந்த நிலை ஏற்படாதென என்ன நிச்சியம். இத்துணை விடயங்கள் நடந்து இருந்தும் இன்னும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் நாம் என்ன உணர்த்த போகிறோம். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்க இந்திய, சீன அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி யார் குரல் கொடுக்க போகிறோம். நாமும் இந்திய பிரஜைகள் தானே பின்னர் ஏன் இந்த இந்திய அரசுக்கு நம் மேல கோபம். புரியவில்லை ராஜீவை கொன்றதாலா, ஒரு உயிருக்காக இத்துணை உயிர்கள் வேண்டுமா . ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்க அமைக்க பட்ட ஜெயின் கமிசன் கேட்ட பல கேள்விகள் இன்னும் புதிராகவே உள்ளன. அந்த விசயத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டு இருக்கிறது. கேள்விகள் பல. நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.

உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

வியாழன், 21 மே, 2009

தமிழரின் தாகம் தமிழ் ஈழமும் புலிகளும்


தலைவர் பிரபாகரனை பற்றி பாராட்டுகளும் அவதூறுகளும் பரிமாறி கொள்ளபடுகின்றன /பகிர்ந்து கொள்ள படுகின்றன. இங்கு நமக்கு சில விடயங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பட வேண்டும். விடுதலை புலிகளும், தேசிய தலைவரும் ஈழதமிழ் மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள பட்டு இருகிறார்கள். விடுதலை புலிகளை விடுத்து தமிழ் ஈழம் என்பதை நாம் பிரித்து காண இயலாது. மக்கள் அவர்களை அங்கிகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாய் இந்த ஈழ சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர்கள் தொலைந்து போய் இருப்பர். மேலும் ஈழ சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வலிமையும் உரிமையும் புலிகளுக்கு எம் மக்களால் அளிக்க பட்டு இருப்பது ஈழ வரலாறு அறிந்த எந்த மனிதர்களும் மறுக்க இயலாது. ஒரு வேளை ஈழ மக்கள் புலிகளை அவ்வாறு ஏற்காமல் இருந்திருந்தால் இந்த உலகும் இலங்கை அரசும் ஈழ போராட்டத்தின் வலிமையை உணராது இருந்திருபார் என்றே நினைக்க தோன்றுகிறது.

புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி விமர்சிப்பவர் ஈழ வரலாறு தெரியாதவர் என்பதே என் கூற்று. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எம் தமிழ் மக்கள் எண்ணப்பட முடியாத இன்னலை அனுபவித்து வந்தனர். தந்தை செல்வாவின் தலைமையில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. வன்முறை இல்லா போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்த நாடுகள் கூட ஒடுக்கும் வர்கத்தின் ஆயுதம் முன்பு பல உயிரை இழந்து இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக இப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி சுதந்திரம் அடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஈழ போராட்டமும் இந்திய விடுதலை போராட்டமும் ஒப்பிட இயலாதது. இது எல்லோரும் அறிந்ததே. இந்திய விடுதலை போராட்டம் ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்பட முன்னெடுக்க பட்ட போராட்டம் ஆனால் ஈழ போராட்டம் எம் சொந்த மண்ணில் எமக்கு அடிப்படை உரிமைகள் மறுத்த எம்மை ஆளும் பாசிச சிங்கள இன அரசுக்கு எதிராக எடுக்க பட்டது. நாம் ஒன்றை புரிதல் மிகவும் முக்கியம். இந்த இரு போராட்டங்களும் அவை முன்னெடுக்க பட்ட காலங்கள், யார்க்கு எதிராக ஏன் முன்னெடுக்க பட்டன போன்ற விடயங்களில் மிகுந்த மாறுபாடு கொண்டவை. எனவே அவை இரண்டையும் ஒப்பிடுவது ஏற்க்கதக்க விடயம் இல்லை.

இலங்கையை ஆளும் பாசிச சிங்கள இன வெறி அரசை இனி அமைதியான போராட்டங்களின் மூலம் பணிய வைக்க இயலாது என்பதலாயே ஆயுத போராட்டம் எமது மக்கள் மூலமாக முன்னெடுக்க பட்டது. போராட்ட களங்களும், காலங்களும் மாறும் பொழுது போராட்டங்களின் பரிமாணங்களும் மாறுவது இயல்பு தான். இதில் டெலோ, ஈ.பி.எல்.ஆர. எப் ,இரோஸ்,ப்ளோட் என பல இயக்கங்கள் ஈடுபட்டு இருந்தாலும், புலிகளின் இயக்க நெறிமுறைகளும் அவர்களின் துணிவும் ஒழுக்க கோட்பாடுகளுமே அவர்களை மக்கள் தங்கள் உரிமைக்காய் போராடும் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள வைத்தது. புலிகள் மற்ற போராளிகளின் முன்னேறத்தை தடுத்தும் அவர்களை அழித்தும் தான் இந்த நிலைமைக்கு வந்தடைந்தனர் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. எப்படி இருந்தாலும் புலிகள் தம் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்று இருந்தனர் என்பதே உண்மை.
இப்படி ஒரு ஒழுக்கம் மிகுந்த போராளி குழுவையும் அதனை தங்கள் வாழ்வுஉரிமைக்காக சார்ந்து இருக்கும் 35 லச்சம் ஈழ தமிழ் மக்களையும் ஏய்த்து பிழைக்கும் சிங்கள இன வெறி அரசும், அவரின் அடி வருடி நடக்கும் துரோகிகளும் ஒருகாலும் எம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்பதும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்பதும் வெகு விரைவில் நடக்க போகும் விடயங்கள்.

புதன், 20 மே, 2009

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.


உண்மையில் இந்திய அரசு நினைத்து இருந்தால் இந்த இனதொழிப்பு போரை தடுத்து இருக்கலாம்.ஆனால் இந்திய அரசு தனது வெளிஉறவு கொள்கைக்காகவும் பிரந்திய பாதுகாப்புக்காகவும் ஈழ மக்களின் உயிரை பணயமாக வைத்து விட்டது. குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்காமல் இருந்திருக்கலாம் அப்படி செய்து இருந்தால் பல மடங்கு அழிவு தடுக்க பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் உள்ள பல பேருக்கு ஈழத்தின் அடிப்படை உண்மைகள் தெரியாது போய் விட்டன. தமிழர் ஆகிய நாம் நம் எதிர்ப்பையும் வேண்டுகோளையும் சற்றே வலுவான முறையில் ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் உணர்த்தி இருக்கலாம். ஈழம் பற்றிய செய்திகளும் அங்கு செய்ய படும் இன கொலைகளின் நிழற்படங்களும் நமக்கே கிடைக்கும் போது எந்த ஒரு மக்கள் அவை உறுப்பினரும் அல்லது சட்டசபை உறுப்பினரும் இந்த ஆதாரங்களோடு விவாத நேரத்தின் போது பேசி இருக்கலாம்.
ராஜீவ் கொலைக்கு பின் தமிழ் ஈழம் என்ற தேசிய உணர்வு கொண்டவர் அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலைக்கு தள்ள பட்டு விட்டனர். எந்த இந்தியனும் கொலை நிகழ்ந்த களம் அதன் காரணங்கள பற்றி ஆராயவில்லை.
ஒரு அரசு தனது ஆயுத பலத்தை முன்னெடுக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை எத்துனை காலம் அஹிம்சா முறையில் எதிர்ப்பர் என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. எப்படி மாற்றி சொன்னாலும் புலிகள் முன்னெடுத்த ஆயுத போரட்டமே இலங்கை அரசு மட்டுமின்றி நிகழ்கால உலகும் ஒரு முக்கிய பிரச்சினையாக ஈழ பிரச்சனயை எடுத்து கொள்ள காரணமானது. இதை இல்லை என்று மறுப்பவர் வரலாறு அறியாதவர் என்றே சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா அவர்களின் சொற்படி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஒடுக்கும் சக்திக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது உலக நியதி அது தான் ஈழ போராட்ட களத்திற்கும் பொருத்தமானது. எனவே புலிகளை விடுத்து ஈழ பிரச்சினையினை நாம் பார்க்க இயலாது. மிக சிலரை விடுத்து பெருபான்மை தமிழ் மக்கள் புலிகளை தங்கள் ஏகபோக பிரதிநிதிகளாய் பார்த்தார்கள் என்பதே உண்மை. இந்திய, சீன அரசுகளின் ஆயுத உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் இலங்கை அரசு இந்த போரில் வென்று இருக்காது .
ஒரு பழமையான இனத்தின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்றும் அடையாளமிட்ட பெருமை இந்திய மக்களாகிய நம்மையே சேரும். ராஜீவ் என்ற ஒரு மாசுபட்ட மனிதனின் படுகொலைக்காக அந்த குற்றம் முழுமையாய் நிரூபிக்கப்படாமல் இருந்தும் நம் உறவுகளின் தமிழ் ஈழ கனவையும் அவரது அடிப்படை உரிமைகளையும் படுகுழியில் இட்டு புதைத்து கொன்ற பெருமையும் நம்மையே சாரும். ஈழ வரலாற்றின் ரத்த பக்கங்களின் பெரும் பகுதி இந்த இந்திய திருமக்களுக்காகவும் தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் மக்களுக்காகவும் கண்டிப்பாய் ஒதுக்கபட்டு இருக்கும். தமிழ் ஈழ எதிர்பாளர்களும் தமிழ் இன தலைவர் என மார் தட்டி நடக்கும் கயவரும் அந்த வரலாறு தெரிந்தும் இழைத்த தோரகங்கள் இந்த உலகுக்கும், தமிழ் ஈழம் தவறு என பேசி திரியும் நம் தற்போதைய தலைமுறை தமிழருக்கும் ஒரு தினம் கண்டிப்பாய் தெரிய வரும்.
எவ்வாறேனும் தமிழ் ஈழம் என்பது கண்டிப்பாய் உதித்தே தீரும். எம் மக்கள் எப்படி ஒடுக்க பட்டாலும் அது அமைந்தே தீரும் ஒரு வரலாற்று போராட்டத்தின் மூலமாய் எம் தலைவனின் உதவியோடு.

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.

சனி, 16 மே, 2009

நெஞ்சு பொறுக்குதிலையே


"நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட தமிழரை நினைத்து விட்டால்" தமிழ் கவினர் பாரதி இப்படி பாடி இருக்கலாம். என் நெஞ்சு கொதித்து போய்விட்டது. நம் தமிழ் மக்களை என்னவன்று சொல்வது என்ன தான் நினைத்து இந்த தேர்தலில் இவர் ஓட்டு போட்டனர் என்று தெரிய வில்லை. இன உணர்வு என்பது தவறாசரியா என்பது அல்ல வாதம். எம் இன மக்கள் மாக்களை போல அழிக்க படும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த திரு.காரணநிதி அவர்கள் மறுபடியும் வெற்றி. சீமான் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பொய்இல்லை என்று தோன்றுகிறது. தமிழனின் இன உணர்வு சில சுயநல கொள்கைகள், பல ரூபாய் நோட்டுகள் போன்றவற்றிக்கு விற்கப்பட்டு விட்டது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 6000 தமிழர்கள் கொல்ல பட்டு உள்ளனர். அரக்கன் ராஜபக்சே இன்னும் இரண்டு நாட்களில் புலிகளை (தமிழர்களை) முடித்து விடுவோம் என சொல்லி இருக்கிறார். அதற்கு அனுமதி கொடுத்தார் போலே இங்கு முடிவுகள் வந்து விட்டது. அன்னை சோனியா காந்தியின் எண்ணப்படி இனி கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் மக்களும் கொல்ல பட்டுவிடுவர் வரும் மே 21 முன் எல்லாம் நடந்து விடும்.
தமிழ்நாட்டில் இனி என்ன நடக்கும் வழக்கம் போலே கருணாநிதி இந்த முறை பத்து மந்திரி பதவி கேட்பார். இன்னும் ஒரு பத்து தலை முறைக்கு சொத்து சேர்த்து விட்டு போய் சேர்வர். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அனுதாப அலை மூலம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும்.
இலங்கையில் ராஜபக்சே கடைசி தமிழரின் ரத்தத்தை உறிஞ்சு முடித்த பின் ஐ.நா சபையும் அமெரிக்காவும் தலை இட்டு போர் நிறுத்தம் கொண்டு வரும். ஐ.நா சபை நிலைமையை ஆராய ஒரு குழுவை அனுப்பும். குழுவினர் அங்கு சென்று ஆராய்ந்த பின் தமிழர் என்று ஒரு இனமே அங்கு இல்லை என அறிக்கை விடுவர். இலங்கை முழு சிங்கள நாடாய் ஜொலிக்கும்.
சீனா இலங்கையின் கையை பிடித்து இந்தியாவின் முக்கிய பகுதிகளை வேவு பார்க்கும். இன்னும் இருபத்துஆண்டுகளில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கும். இலங்கையின் உதவியோடு இந்தியாவை சீனா போரில் வெல்லும். தமிழ்நாடு இலங்கையின் ஒரு பகுதி என இலங்கை உரிமை கோரும் கருணாநிதியின் கேடு கெட்ட வாரிசுகளும் சில பல நோட்டுகளுக்காக ஆமாமா போடுவார்.
இதெல்லாமும் நடக்கும். தமிழன் அப்புவும் அவன் வயரு நிறைஞ்சபோதும் நு சொல்லுவான்.இந்த நாட்டில பிறந்த ஒரே பாவத்துக்காக என்னை போன்ற தமிழர் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்வர்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.