திங்கள், 25 மே, 2009
உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது
ஊடகங்கள் சொல்வதை கேட்க வேண்டாம். ஆனால் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் சுயநல கிருமிகள் ஆனால் நாம் முதலில் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கிற எம் மக்களை காப்பாற்றுவோம் பின்னர் இந்த நச்சு கிருமிகளை அழிக்கலாம். உங்களுக்கு இன்னும் இந்த கிருமிகள் மேல் நம்பிக்கை உள்ளதா மக்களே. இந்திய திருநாட்டில் நெடுங்கலமாய் தமிழனம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது வெகு சிலரால் தான் உணர முடிகிறது. தந்தை பெரியார் சொன்னது போல நாம் எல்லாம் அடிமைகள் தான் ஆனால் இந்தியாவின் குடிமக்கள் என்ற போர்வையில். வேற எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தாரை தவிர எவரும் இந்த அளவு நிம்மதியாக இருக்க இயலாது. "வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள்.
எல்லா இந்திய ஊடகங்களும் தமிழனை ஏமாற்றும் முயற்சியில் முழு வெற்றி அடைந்துள்ளனர் என்பது தான் உண்மை. ஆனால் நாம் நம் முதல்வரை குறை கூறுவுது ஏன் தெரியுமா. தமிழ் இன பிரதிநிதியாய் அவரை போற்றும் நம் மக்களக்கு அவரின் இந்த செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது. காங்கிரஸ் என்னும் நச்சு பாம்பு தான் நடந்த அனைத்துக்கும் காரணம் என தெரிந்தும் அவருடன் உறவாடுவதை எந்த தமிழனாலும் ஏற்று கொள்ள இயலாது . எந்த ஒரு போராட்டமும் முன்னே செல்ல ஒரு தலைவர் அவசியம் என்ன தான் சிலர் முதல்வரை ஏற்று கொள்ளா விட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு தலைவர் இப்படி செய்வது நமக்கு எப்படி மன அமைதியை தரும். நீங்களோ நானோ சென்று நடுவண் அரசிடம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதீர் எங்கள் ஈழ ரத்த உறவுகளை காப்பாற்றுங்கள் என சொல்ல முடியுமா. நம் ஒவ்வொரு தமிழனாலும் போராட இயலாது என்று தானே நம் முதல்வரை அனுப்பினோம் ஆனால தன் குடும்பத்தின் அரசியல் எதிர் காலத்திர்க்காகவும் சுயநலம் பேணவும் நம் முதல்வர் இப்படி செய்யலாமா.
ஒரு கோணத்தில் எப்படி இருந்தாலும் மக்கள் சபையில் முதல்வர் செய்த நம்பிக்கை துரோகம் தான் முன்னில் நிற்கும். தமிழரின் பால் ஒற்றுமை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
உளமாற்று வித்தைகள் என சிலர் இவற்றை கூறினாலும் உண்மை கசக்க தானே செய்யும். எம் ரத்த உறவுகள் எம்மை காப்பற்றும் என எண்ணி இருந்த ஒவ்வொரு ஈழ மனமும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கும். தன்னிகரில்லா ஒரு தூய தலைவன் இந்த நெடிய சுதந்திர போராட்டத்தில் அவர் தம் வாழ்வு ஆதாரமாய் விளங்கிய ஒருவனும் உயிருடன் உள்ளனா இல்லையா என பதறும் அந்த உயிர்களுக்கு விடை சொல்ல போவது யார். நாளை நமக்கும் இந்த நிலை ஏற்படாதென என்ன நிச்சியம். இத்துணை விடயங்கள் நடந்து இருந்தும் இன்னும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் நாம் என்ன உணர்த்த போகிறோம். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்க இந்திய, சீன அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி யார் குரல் கொடுக்க போகிறோம். நாமும் இந்திய பிரஜைகள் தானே பின்னர் ஏன் இந்த இந்திய அரசுக்கு நம் மேல கோபம். புரியவில்லை ராஜீவை கொன்றதாலா, ஒரு உயிருக்காக இத்துணை உயிர்கள் வேண்டுமா . ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்க அமைக்க பட்ட ஜெயின் கமிசன் கேட்ட பல கேள்விகள் இன்னும் புதிராகவே உள்ளன. அந்த விசயத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டு இருக்கிறது. கேள்விகள் பல. நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.
உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக