வியாழன், 21 மே, 2009
தமிழரின் தாகம் தமிழ் ஈழமும் புலிகளும்
தலைவர் பிரபாகரனை பற்றி பாராட்டுகளும் அவதூறுகளும் பரிமாறி கொள்ளபடுகின்றன /பகிர்ந்து கொள்ள படுகின்றன. இங்கு நமக்கு சில விடயங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பட வேண்டும். விடுதலை புலிகளும், தேசிய தலைவரும் ஈழதமிழ் மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள பட்டு இருகிறார்கள். விடுதலை புலிகளை விடுத்து தமிழ் ஈழம் என்பதை நாம் பிரித்து காண இயலாது. மக்கள் அவர்களை அங்கிகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாய் இந்த ஈழ சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர்கள் தொலைந்து போய் இருப்பர். மேலும் ஈழ சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வலிமையும் உரிமையும் புலிகளுக்கு எம் மக்களால் அளிக்க பட்டு இருப்பது ஈழ வரலாறு அறிந்த எந்த மனிதர்களும் மறுக்க இயலாது. ஒரு வேளை ஈழ மக்கள் புலிகளை அவ்வாறு ஏற்காமல் இருந்திருந்தால் இந்த உலகும் இலங்கை அரசும் ஈழ போராட்டத்தின் வலிமையை உணராது இருந்திருபார் என்றே நினைக்க தோன்றுகிறது.
புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி விமர்சிப்பவர் ஈழ வரலாறு தெரியாதவர் என்பதே என் கூற்று. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எம் தமிழ் மக்கள் எண்ணப்பட முடியாத இன்னலை அனுபவித்து வந்தனர். தந்தை செல்வாவின் தலைமையில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. வன்முறை இல்லா போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்த நாடுகள் கூட ஒடுக்கும் வர்கத்தின் ஆயுதம் முன்பு பல உயிரை இழந்து இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக இப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி சுதந்திரம் அடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஈழ போராட்டமும் இந்திய விடுதலை போராட்டமும் ஒப்பிட இயலாதது. இது எல்லோரும் அறிந்ததே. இந்திய விடுதலை போராட்டம் ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்பட முன்னெடுக்க பட்ட போராட்டம் ஆனால் ஈழ போராட்டம் எம் சொந்த மண்ணில் எமக்கு அடிப்படை உரிமைகள் மறுத்த எம்மை ஆளும் பாசிச சிங்கள இன அரசுக்கு எதிராக எடுக்க பட்டது. நாம் ஒன்றை புரிதல் மிகவும் முக்கியம். இந்த இரு போராட்டங்களும் அவை முன்னெடுக்க பட்ட காலங்கள், யார்க்கு எதிராக ஏன் முன்னெடுக்க பட்டன போன்ற விடயங்களில் மிகுந்த மாறுபாடு கொண்டவை. எனவே அவை இரண்டையும் ஒப்பிடுவது ஏற்க்கதக்க விடயம் இல்லை.
இலங்கையை ஆளும் பாசிச சிங்கள இன வெறி அரசை இனி அமைதியான போராட்டங்களின் மூலம் பணிய வைக்க இயலாது என்பதலாயே ஆயுத போராட்டம் எமது மக்கள் மூலமாக முன்னெடுக்க பட்டது. போராட்ட களங்களும், காலங்களும் மாறும் பொழுது போராட்டங்களின் பரிமாணங்களும் மாறுவது இயல்பு தான். இதில் டெலோ, ஈ.பி.எல்.ஆர. எப் ,இரோஸ்,ப்ளோட் என பல இயக்கங்கள் ஈடுபட்டு இருந்தாலும், புலிகளின் இயக்க நெறிமுறைகளும் அவர்களின் துணிவும் ஒழுக்க கோட்பாடுகளுமே அவர்களை மக்கள் தங்கள் உரிமைக்காய் போராடும் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள வைத்தது. புலிகள் மற்ற போராளிகளின் முன்னேறத்தை தடுத்தும் அவர்களை அழித்தும் தான் இந்த நிலைமைக்கு வந்தடைந்தனர் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. எப்படி இருந்தாலும் புலிகள் தம் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்று இருந்தனர் என்பதே உண்மை.
இப்படி ஒரு ஒழுக்கம் மிகுந்த போராளி குழுவையும் அதனை தங்கள் வாழ்வுஉரிமைக்காக சார்ந்து இருக்கும் 35 லச்சம் ஈழ தமிழ் மக்களையும் ஏய்த்து பிழைக்கும் சிங்கள இன வெறி அரசும், அவரின் அடி வருடி நடக்கும் துரோகிகளும் ஒருகாலும் எம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்பதும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்பதும் வெகு விரைவில் நடக்க போகும் விடயங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக