புதன், 20 மே, 2009

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.


உண்மையில் இந்திய அரசு நினைத்து இருந்தால் இந்த இனதொழிப்பு போரை தடுத்து இருக்கலாம்.ஆனால் இந்திய அரசு தனது வெளிஉறவு கொள்கைக்காகவும் பிரந்திய பாதுகாப்புக்காகவும் ஈழ மக்களின் உயிரை பணயமாக வைத்து விட்டது. குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்காமல் இருந்திருக்கலாம் அப்படி செய்து இருந்தால் பல மடங்கு அழிவு தடுக்க பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் உள்ள பல பேருக்கு ஈழத்தின் அடிப்படை உண்மைகள் தெரியாது போய் விட்டன. தமிழர் ஆகிய நாம் நம் எதிர்ப்பையும் வேண்டுகோளையும் சற்றே வலுவான முறையில் ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் உணர்த்தி இருக்கலாம். ஈழம் பற்றிய செய்திகளும் அங்கு செய்ய படும் இன கொலைகளின் நிழற்படங்களும் நமக்கே கிடைக்கும் போது எந்த ஒரு மக்கள் அவை உறுப்பினரும் அல்லது சட்டசபை உறுப்பினரும் இந்த ஆதாரங்களோடு விவாத நேரத்தின் போது பேசி இருக்கலாம்.
ராஜீவ் கொலைக்கு பின் தமிழ் ஈழம் என்ற தேசிய உணர்வு கொண்டவர் அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலைக்கு தள்ள பட்டு விட்டனர். எந்த இந்தியனும் கொலை நிகழ்ந்த களம் அதன் காரணங்கள பற்றி ஆராயவில்லை.
ஒரு அரசு தனது ஆயுத பலத்தை முன்னெடுக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை எத்துனை காலம் அஹிம்சா முறையில் எதிர்ப்பர் என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. எப்படி மாற்றி சொன்னாலும் புலிகள் முன்னெடுத்த ஆயுத போரட்டமே இலங்கை அரசு மட்டுமின்றி நிகழ்கால உலகும் ஒரு முக்கிய பிரச்சினையாக ஈழ பிரச்சனயை எடுத்து கொள்ள காரணமானது. இதை இல்லை என்று மறுப்பவர் வரலாறு அறியாதவர் என்றே சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா அவர்களின் சொற்படி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஒடுக்கும் சக்திக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது உலக நியதி அது தான் ஈழ போராட்ட களத்திற்கும் பொருத்தமானது. எனவே புலிகளை விடுத்து ஈழ பிரச்சினையினை நாம் பார்க்க இயலாது. மிக சிலரை விடுத்து பெருபான்மை தமிழ் மக்கள் புலிகளை தங்கள் ஏகபோக பிரதிநிதிகளாய் பார்த்தார்கள் என்பதே உண்மை. இந்திய, சீன அரசுகளின் ஆயுத உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் இலங்கை அரசு இந்த போரில் வென்று இருக்காது .
ஒரு பழமையான இனத்தின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்றும் அடையாளமிட்ட பெருமை இந்திய மக்களாகிய நம்மையே சேரும். ராஜீவ் என்ற ஒரு மாசுபட்ட மனிதனின் படுகொலைக்காக அந்த குற்றம் முழுமையாய் நிரூபிக்கப்படாமல் இருந்தும் நம் உறவுகளின் தமிழ் ஈழ கனவையும் அவரது அடிப்படை உரிமைகளையும் படுகுழியில் இட்டு புதைத்து கொன்ற பெருமையும் நம்மையே சாரும். ஈழ வரலாற்றின் ரத்த பக்கங்களின் பெரும் பகுதி இந்த இந்திய திருமக்களுக்காகவும் தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் மக்களுக்காகவும் கண்டிப்பாய் ஒதுக்கபட்டு இருக்கும். தமிழ் ஈழ எதிர்பாளர்களும் தமிழ் இன தலைவர் என மார் தட்டி நடக்கும் கயவரும் அந்த வரலாறு தெரிந்தும் இழைத்த தோரகங்கள் இந்த உலகுக்கும், தமிழ் ஈழம் தவறு என பேசி திரியும் நம் தற்போதைய தலைமுறை தமிழருக்கும் ஒரு தினம் கண்டிப்பாய் தெரிய வரும்.
எவ்வாறேனும் தமிழ் ஈழம் என்பது கண்டிப்பாய் உதித்தே தீரும். எம் மக்கள் எப்படி ஒடுக்க பட்டாலும் அது அமைந்தே தீரும் ஒரு வரலாற்று போராட்டத்தின் மூலமாய் எம் தலைவனின் உதவியோடு.

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்தியா தன் தலையில் தானே ம்ண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது சீனர்களால் வெகு விரைவிலேயே தெரியப் போகிறது.

தமிழினத் தலைவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் படிந்துள்ள ரத்தக்கரையைத் துடைக்கவே முடியாது.

இன்று அவர்கள் செய்துள்ள துரோகம்
எதிர்காலத்திலே தமிழகத் தமிழன் இந்திய டாங்கிகளால் மிதித்துக் கொல்லப் படும்போது தெரியும்.
நீ தமிழனா ,இந்தியனா என்ற கேள்வி
வரத்தான் போகிறது.
வடக்கே வாழுந்தமிழர்கள் அனைவரும் மதராசி தான்.இந்தியன் அல்ல.ஒன்றும் பெரிய காரணமெல்லாம் வேண்டாம்.ஏதோ ஒரு நொண்டிச் சாக்கும்,வெறி பிடித்த ஆட்சி டில்லியிலும் இருந்தாலே இது நடக்கத்தான் போகிறது.

அப்போது மானங்கெட்டத் தமிழர்களுக்கு ஆதரிப்பவர்கள் ஈழத்தமிழர்களாகத்தான் இருப்பார்கள்.
இதைச் சொல்லும் நான் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் என்பதுதான் வேதனையும்,வெட்கக்கேடும்.