சனி, 16 மே, 2009
நெஞ்சு பொறுக்குதிலையே
"நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட தமிழரை நினைத்து விட்டால்" தமிழ் கவினர் பாரதி இப்படி பாடி இருக்கலாம். என் நெஞ்சு கொதித்து போய்விட்டது. நம் தமிழ் மக்களை என்னவன்று சொல்வது என்ன தான் நினைத்து இந்த தேர்தலில் இவர் ஓட்டு போட்டனர் என்று தெரிய வில்லை. இன உணர்வு என்பது தவறாசரியா என்பது அல்ல வாதம். எம் இன மக்கள் மாக்களை போல அழிக்க படும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த திரு.காரணநிதி அவர்கள் மறுபடியும் வெற்றி. சீமான் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பொய்இல்லை என்று தோன்றுகிறது. தமிழனின் இன உணர்வு சில சுயநல கொள்கைகள், பல ரூபாய் நோட்டுகள் போன்றவற்றிக்கு விற்கப்பட்டு விட்டது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 6000 தமிழர்கள் கொல்ல பட்டு உள்ளனர். அரக்கன் ராஜபக்சே இன்னும் இரண்டு நாட்களில் புலிகளை (தமிழர்களை) முடித்து விடுவோம் என சொல்லி இருக்கிறார். அதற்கு அனுமதி கொடுத்தார் போலே இங்கு முடிவுகள் வந்து விட்டது. அன்னை சோனியா காந்தியின் எண்ணப்படி இனி கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் மக்களும் கொல்ல பட்டுவிடுவர் வரும் மே 21 முன் எல்லாம் நடந்து விடும்.
தமிழ்நாட்டில் இனி என்ன நடக்கும் வழக்கம் போலே கருணாநிதி இந்த முறை பத்து மந்திரி பதவி கேட்பார். இன்னும் ஒரு பத்து தலை முறைக்கு சொத்து சேர்த்து விட்டு போய் சேர்வர். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அனுதாப அலை மூலம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும்.
இலங்கையில் ராஜபக்சே கடைசி தமிழரின் ரத்தத்தை உறிஞ்சு முடித்த பின் ஐ.நா சபையும் அமெரிக்காவும் தலை இட்டு போர் நிறுத்தம் கொண்டு வரும். ஐ.நா சபை நிலைமையை ஆராய ஒரு குழுவை அனுப்பும். குழுவினர் அங்கு சென்று ஆராய்ந்த பின் தமிழர் என்று ஒரு இனமே அங்கு இல்லை என அறிக்கை விடுவர். இலங்கை முழு சிங்கள நாடாய் ஜொலிக்கும்.
சீனா இலங்கையின் கையை பிடித்து இந்தியாவின் முக்கிய பகுதிகளை வேவு பார்க்கும். இன்னும் இருபத்துஆண்டுகளில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கும். இலங்கையின் உதவியோடு இந்தியாவை சீனா போரில் வெல்லும். தமிழ்நாடு இலங்கையின் ஒரு பகுதி என இலங்கை உரிமை கோரும் கருணாநிதியின் கேடு கெட்ட வாரிசுகளும் சில பல நோட்டுகளுக்காக ஆமாமா போடுவார்.
இதெல்லாமும் நடக்கும். தமிழன் அப்புவும் அவன் வயரு நிறைஞ்சபோதும் நு சொல்லுவான்.இந்த நாட்டில பிறந்த ஒரே பாவத்துக்காக என்னை போன்ற தமிழர் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்வர்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
நண்பா இங்கே அம்மா வெற்றி பெற்றால் ஒன்னும் நடக்கபோகிறது இல்லை.
ஈழ மக்களுக்கு நல்லதே நடக்கும் என்று நன்புவோம்
சார்
இப்போ மட்டும் என்ன நடக்கும். இன்னும் ரெண்டு காபினெட் மந்திரி பதவி வாங்கி கொண்டு உங்க கருணாநிதி அய்யா வாயை மூடி கொண்டு சோனியாவின் காலடிக்கு செருப்பா இருப்பார். நன் அம்மாவுக்கு ஓட்டு போட சொல்லல. வேற எத்தனையோ பேர் இருந்தாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டு துரோகி கருணாநிதிக்கு ஒரு பாடம் சொல்லி தந்து இருக்கலாம் இல்ல.
இனி என்ன நல்லது நடக்க இருக்கு சார். நன் சொன்ன மாதிரி சோனியாவின் ஆசைக்கு தோதா பிணம்தின்னி ராஜபக்சேவின் படைகள் எஞ்சி இருக்கிற தமிழ் மக்களையும் கொன்னுடுவாங்க. இவனுங்க போர் நிறத்தம் செய்யும் முன் ஒரு தமிழன் கூட உயிரோட இருக்க மாட்டான்
கருத்துரையிடுக